என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்டணி கட்சிகள்"
இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
திமுக போட்டியிடும் தொகுதிகள்:
சென்னை வடக்கு
சென்னை தெற்கு
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம் (தனி)
அரக்கோணம்
வேலூர்
தர்மபுரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
சேலம்
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
திண்டுக்கல்
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
திருநெல்வேலி
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
திருவள்ளூர் (தனி)
கிருஷ்ணகிரி
ஆரணி
கரூர்
திருச்சிராப்பள்ளி
சிவகங்கை
தேனி
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி
மதிமுக- ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோயம்புத்தூர், மதுரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- திருப்பூர், நாகப்பட்டினம் (தனி)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- ராமநாதபுரம்
விடுதலை சிறுத்தைகள்- விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்
இந்திய ஜனநாயக கட்சி - பெரம்பலூர். #ParliamentElection #MKStalin #DMKAlliance
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகம் எடுத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. நிலை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகாந்தை இழுக்க அ.தி.மு.க. அணியும், தி.மு.க. கூட்டணியும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால் தே.மு.தி.க. எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யாமல் காலம் கடத்துவதால் அவர்களது முடிவுக்காக பிற கட்சிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் மட்டுமே உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டு கட்சிகள், ம.தி.மு.க.வுக்கு எத்தனை இடம் என்பது உறுதியாகவில்லை. தே.மு.தி.க. வந்தால் அதற்கான சீட்டை உறுதிப்படுத்திவிட்டு மற்ற கட்சிகளுக்கான சீட்டை முடிவு செய்யலாம் என தி.மு.க. தலைமை நினைக்கிறது. விஜயகாந்த் முடிவுக்காக திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் காத்திருக்கின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம் என்று தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூறிவிட்டனர். நமது கட்சியில் இருந்து இதுவரை ஒருவர் கூட பாராளுமன்றத்துக்கு சென்றது இல்லை. அதற்கான சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அதனை இழக்க வேண்டாம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
‘தி.மு.க கூட்டணியில் இருந்து ஸ்டாலினும் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசி வருகிறார்கள். எனவே மற்றவர்கள் நம் கட்சியை பற்றி பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறி இருக்கிறார்.
கோவா மாநிலத்தின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் யடிஷ் நாயக், பாஜக ஒரு குழப்பமான கட்சி என்றும், கூட்டணி கட்சிகள் ஆட்சியை பார்வையிடலாமே தவிர முக்கிய முடிவுகள் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவாவில் தலைமை இல்லாத பாஜக இருந்து வருவதாகவும், முதல்வர் இல்லாத நேரத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்கவே அவர்களால் முடியவில்லை எனவும் சாடிய நாயக், அரசை எப்படி வழிநடத்துவது எனவே அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல்மந்திரி பாரிக்கர், மும்பை மருத்துவமனையிலும், டெல்லி, அமெரிக்க மருத்துவமனைகளுக்கும் சென்று வந்ததை நாம் பார்த்தோம் ஆனால் கடந்த பல மாதங்களாக தலைமை செயலகத்தில் அவரை காண முடியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
அரசின் இயக்கம் முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாக விமர்சித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு கூட்டணியில் இருந்து விலக நேர்மையாக முடிவெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
தஞ்சாவூர்:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகக்கோரி தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ஜனநாயக மாதர் சங்கத்தினர், ம.தி.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, ஒரத்தநாடு எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், மாநகர செயலாளர் நீலமேகம், சட்டத்திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மாநகர மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் பழனியப்பன், பட்டதாரி அணி மாநில பொதுச்செயலாளர் லெட்சுமி நாராயணன், கோட்ட தலைவர்கள் கதர் வெங்கடேசன், சவுரிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், செயற்குழு உறுப்பினர்கள் மாலதி, செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளர் அன்பு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூடு நடவடிக்கையை கண்டித்தும், எடப்பாடி பழனிச்சாமியை பதவி விலகக்கோரியும் கோஷம் எழுப்பினர்.
பஸ் நிலையத்தின் முன்பு இந்த போராட்டம் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்